சேலம் மாவட்டம் மூல செங்கோட்டையில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார். திவ்யா என்று அந்தப் பெண்ணின் வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அக்கம்பக்கத்தினர் சென்று திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்ஷிகாவும் சடலங்களாக மீட்டுள்ளனர். மனைவிக்கு வயிற்றுவலி இருந்ததாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் எனவும் அவரது கணவர் இளையராஜா கூறுகிறார்.
ஆனால் கிணற்றுக்குள் தவறி விழுந்த வர்ணிகாவை காப்பாற்றும் நோக்கில் பதற்றத்தில் இடுப்பில் வைத்திருந்த தன்ஷிகாவை கிணற்றில் குதித்து தவறவிட்டதாக திவ்யா கூறுவதாக சொல்லப்படுகிறது. குழப்பம் நிற்கும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.