அயோத்தியாவில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவிற்கு உத்திரப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தண்ணிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்களில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பியதில் இந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் அயோத்தியாவிற்க்கு வரும் பக்தர்கள் 15 கிலோ மீட்டர் முன்னதாகவே ராமருக்கு வணக்க வழிபாடுகளை செய்வார்கள்.
அந்த எல்லைக்கு அப்பால் மட்டுமே பள்ளிவாசலுக்கு இடமளிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
வெறிகொண்டு துரத்திய நாய்கள் கூட்டம்..தலை தெறிக்க ஓடிய சிறுவன்..!
ரிவர்ஸ் எடுத்த லாரி..2 லாரிகளுக்கு நடுவே நின்று உடல் நசுங்கி பரிதாபமாக பலியான நபர்..!
200 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!
வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள்..!
கொல்கத்தாவில் மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்..!