நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க கோரி மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது .
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 பேரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது. ஆனால் அதில் இரண்டு பேருக்கு கருணை மனுவுக்கான சட்ட வாய்ப்புகள் இருப்பதால் நான்கு பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேல்முறையீட்டில் இதுபோன்ற சட்டபூர்வ வாய்ப்புகள் ஏதேனும் இருந்தால் ஒருவாரத்திற்குள் அவற்றைப் பயன்படுத்துமாறு கெடு விதித்த டெல்லி உயர் நீதிமன்றம் 4 பேரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்கவில்லை.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த மனுவை நாளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.