--- --:--:-- --

ஸ்ரீநகரில் சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

7

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் பாரமுல்லா சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் காலை 5மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் 3 பேர் திடீரென சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனையடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதிலடியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

மேலும் ஒரு பயங்கரவாதி காயத்துடன் பிடிபட்டார். சண்டையில் பீகாரை சேர்ந்த ரமேஷ் ரஞ்சன் என்ற வீரர் தலையில் குண்டு பாய்ந்து வீரமரணமடைந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon