வருமான வரி வழக்கை திரும்ப பெறக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 1994,1995 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியாக சசிகலா 48 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டுமென்ற வருமானவரித்துறை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது சசிகலா தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள வருமான வரி தொடர்பான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி வழக்கை திரும்பப் பெறுமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது.
வருமான வரித் துறை தரப்பில் அதற்கு சில நிபந்தனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறையின் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.