ஓடும் பேருந்தில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் சென்ற பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடத்துனரை கேரள போலீசார் கைது செய்தனர்.

 

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணித்த பெண் மருத்துவருக்கு நடத்துனர் மதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. அத்துமீறிய நடத்துனரின் செயல்களை செல்போனில் பதிவு செய்து அந்தப் பெண் கேரள மாநில போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

 

அதன் அடிப்படையில் இடிச்சகபிலாமூடு பகுதியில் பேருந்தை தடுத்து நிறுத்திய போலீசார் புகார் அளித்த பெண்ணிடமிருந்து ஆதாரத்தை பெற்றுக்கொண்டு நடத்துனரை கைது செய்தனர்.


Leave a Reply