ஒரேநாளில் கால்நடை பூங்காவிற்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டு விழா
வரும் 9ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில், இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவிற்கும்,கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து உள்ளதாகவும், இந்த விழா இரண்டு நாட்கள் நடக்கும் என்றும் 9 ,10 ஆகிய தேதிகளில் தலைவாசலை சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகவும்,அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




