ராகுல்காந்தியை “டியூப்லைட்” என்ற பிரதமர் மோடி
குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். காங்கிரசை அவர் கடுமையாக விமர்சித்து பேசிய போது ராகுல்காந்தி இடையில் எழுந்து குறுக்கிட்டார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மோடி தான் கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டு இருப்பதாகவும் ஆனால் கரண்ட் அங்கு போய் சேருவதற்கு இவ்வளவு நேரம் தேவை பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
பல ட்யூப் லைட்டுகள் இப்படித்தான் உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார். இதேபோல காங்கிரசுக்கு வேண்டுமானால் மகாத்மாகாந்தி டிரெய்லர் ஆக இருக்கலாம் தங்களுக்கு அவர் தான் உயிர் மூச்சு என்று மோடி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




