“யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை”:செல்லூர் ராஜூ

யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை அலங்காநத்தம் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மீது என்ன குறை இருந்தாலும் திருத்திக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். பின்னர் நடிகர் வீடுகளில் நடக்கும் வருமானவரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறுதான் என குறிப்பிட்டார்.


Leave a Reply