சேலம் மாவட்டத்தில் முதியோர்களை மட்டும் குறிவைத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் வினோதமான காரியத்தில் ஒரு சைக்கோ வாலிபன் ஈடுபட்டு வருகிறான்.
அவன் 1ஆம் தேதியன்று கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நிழல்கூடத்தில் படுத்து உறங்கிய ஒரு முதியவரை கல்லை போட்டு கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளான். 2ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் திருவகவுண்டனூர் பைபாஸ் அருகே உறங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து விட்டு அவரிடம் உள்ள பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான்.
இதேபோல் நேற்று முன்தினம் பழைய பேருந்து நிலையம் அருகில் படுத்துக்கொண்டு இருந்த முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவரிடம் உள்ள பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றான் அந்த சைக்கோ கொலைகாரன்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது 3 கொலை சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதில் அந்த சைக்கோ வாலிபன் போல் உருவம் கொண்ட ஒருவன் சிக்கியுள்ளான்.மேலும் இந்த கொலை, கொள்ளை சமந்தமாக சந்தேகத்திற்குரிய 50 வாலிபர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவனை எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல்துறைக்கு அளிக்கும்படியும், அவனைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும், கூடிய விரைவில் அந்த சைக்கோ வாலிபன் பிடி படுவான் என்றும் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.