ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழக அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு ஆகியன சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட தலைவி விமலா, பரமக்குடி மாவட்ட தலைவி சியா ஆகியோர் தலைமை வகித்தனர்.

 

மாவட்ட செயலர்கள் மணிமேகலை, ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர். மகப்பேறு திட்டத்தை எளிமையாக்க வேண்டும், ஊழியர்கள் மீது காணொளி காட்சி மூலம் சுகாதாரத் துறை செயலர் எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், தன்னிலை விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல் ஒழுங்கு நடவடிக்கை முடிவுகளை அமலாக்கக்கூடாது, சமுதாய நல செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், தலைமை சுகாதார செவிலியரை சமுதாய நல அலுவலராக பதவி உயர் வழங்க வேண்டும், செவிலியர்களுக்கு உதவியாளர் ஒருவர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன.

உண்ணா விரதப் போராட்டம் முடிந்த பின், இக்கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதென மாவட்ட தலைவி விமலா கூறினார்.


Leave a Reply