4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு

ஈரோட்டில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கிழவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவுந்தம்பாடி புதூரை சேர்ந்த பழனிச்சாமி என்ற கிழவன் 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

 

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply