டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு
தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு ராதாரவி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ராதாரவிக்கு எதிராக தலைவர் பதவிக்கு பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் சங்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு சின்மயி போட்டியிட தகுதி இல்லை எனக்கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ராதாரவி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




