நாடோடிகள் திரைப்பட நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

நாடோடி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பு காரணமாக ஈரோட்டில் காலமானார். அவருக்கு வயது 54. 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் சசிகுமாருக்கு மாமன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

 

அரசு வேலை கிடைத்தால்தான் தனது பெண்ணை திருமணம் செய்து தருவேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவரது கதாபாத்திரம் பேசும் படியாக இருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் வெளியாகிய நாடோடி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இறுதி சடங்குகள் சொந்த ஊரில் நடைபெற்றன.


Leave a Reply