தொட்டதுமே தூள் பறக்குது மம்பட்டியான்.. பாடலுக்கு நடனமாடி என்ட்ரி கொடுத்த மணமகள்..ஆச்சர்யத்தில் உறவினர்கள்

கேரளாவில் திருமண நிகழ்ச்சிக்கு மணப்பெண் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடி வந்து அசத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கண்ணூரில் அஞ்சலி என்பவருக்கும், வருண் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

 

இதில் மணமகனுக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்து அஞ்சலி திருமண மண்டபத்திற்கு பட்டுப்புடவை அலங்காரத்துடன் மம்பட்டியான் பட பாடலுக்கு தோழிகளுடன் நடனமாடி வந்தார். அவரின் தோழிகளும் பாடலுக்கு நடனம் ஆடியபடி வந்தனர்.

 

திருமண நிகழ்ச்சியில் மணமகன் அருகே மணமகள் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு மணமகள் அஞ்சலி நடனமாடியபடி வந்தது ஆச்சரியத்தை அளித்தது. அப்போது திருமணத்திற்கு வந்த ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Leave a Reply