--- --:--:-- --

டிரம்ப் முகத்துக்கு எதிரே உரையை கிழித்துப்போட்ட சபாநாயகர்….

14

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் உரை குறிப்பை அவரது முன்னிலையிலேயே சபாநாயகர் நான்சி கிழித்து போட்ட நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகரான நான்சிக்கும், அதிபர் டிரம்புக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.

 

கூட்டுக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றும் முன் பேசிய நான்சி அதிபருடன் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பேசுவதே இல்லை என்றார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றியபோது அவரது பேச்சின் குறிப்பை அவருக்குப் பின்னால் இருந்த சபாநாயகர் நான்சி கிழித்துப் போட்டு கொண்டிருந்தார்.

 

டிரம்ப் இதை கண்டும் காணாததுபோல் தனது உரையை முடித்துக் கொண்டு நகர்ந்து சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon