நைட் ஸ்டடி என கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… பாதிரியார் மீது புகார்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள அறந்தாங்கியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் புனித அந்தோணியார் என்ற பெயரில் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் பள்ளியின் விடுதியில் தங்கி வருகின்றனர்.

 

இதற்கிடையே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆலயத்தின் பாதிரியாராக நியமிக்கப்பட்ட மரிய பிரிட்டோ என்பவர் பள்ளி தாளாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே பள்ளி விடுதி காப்பாளர்களாக இருந்த இரு பெண்களை நீக்கியவர் விடுதி பொறுப்புகளையும் கூடுதலாக பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 

அவ்வப்போது விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளை நைட் ஸ்டடி என கட்டாயப்படுத்தி வரவழைக்கும் பாதிரியார் மரிய பிரிட்டோ மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது அறையை சுத்தம் செய்ய வேண்டுமென மாணவிகளை வரவழைக்கும் மரிய பிரிட்டோ பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

 

விடுதியில் பெண் காவலர்களை நியமிக்க மாணவிகள் பலமுறை வலியுறுத்தியும் அதனை மரிய பிரிட்டோ கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. பாதிரியாரின் தொடர் கொடுமையை தாங்க முடியாத மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் அளிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி பட்டாளம் பட்ட வழங்கு அலுவலர் சாருலதா மற்றும் சமூக பாதுகாப்பு தாசில்தார் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்தவற்றை அதிகாரிகளிடம் கூறிய தகவல்கள் ஆட்சியரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. பாதிரியார் மரிய பிரிட்டோவிற்க்கு அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில் சோழவரம் போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply