சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஓவியப்போட்டி
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வமோடு பங்கேற்றார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவ மாணவியருக்கான ஓவியப்போட்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்றது.
நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலைய சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஓவியப் போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களை ஆர்வத்துடன் வரைந்து வண்ணம் தீட்டினார்கள்.
சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பரிசுகளும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




