--- --:--:-- --

அமைச்சர் ஜெயக்குமாரின் பாக்ஸிங் ! வெளிவரும் மீம்ஸ்!

7

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாக்ஸிங் செய்து அனைவரையும் அசத்தினார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொள்ள வந்த ஜெயக்குமார் கைகளில் கிளவுஸ்களை கட்டிக் கொண்டு பாக்ஸிங்கில் ஈடுபட்டார். அமைச்சர் பாக்ஸிங் செய்ததை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களும் வெளியாகியுள்ளன.

 

பின்னர் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற ஒரு சில முறைகேட்டை வைத்து அனைத்து தேர்வுகளையும் சந்தேகப்படக் கூடாது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon