--- --:--:-- --

ரஜினியும் நாங்களும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

6

தற்போது நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என்றும் அதைவிட சிறப்பான ஆன்மீக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

சென்னை அடையாறில் நடைபெற்ற துக்ளக் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் துக்ளக் இதழை கையில் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்றார்.

 

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி நடிகர் ரஜினிகாந்த் நடப்பதை பேசுகிறார் என்றும், அதை பொறுக்க முடியாதவர்கள் நாடக அரசியல் செய்கிறார்கள் என்றும் கூறினார். ரஜினிகாந்த்தும் தாங்களும் ஒரு இலக்கை நோக்கி பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon