பைக் ரேசில் தவறி கீழே விழுந்த இளைஞர்!
சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.
இதனால் ஏற்படும் விபத்துகளில் ரேசில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் காயமடைகின்றனர். இந்த நிலையில் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கே சர்வே சாலையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிக ஒலி எழுப்பியபடி பைக் ரேசில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் யாரும் அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்றனர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




