பிரிட்டன் இளவரசரான ஹாரியின் மனைவியைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அரச வாழ்வைத் துறந்து உள்ள இளவரசர் ஹாரியும் அவரது மனைவியும் மேகனும் கனடாவில் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த அக்கேஷனல் என்ற பெண் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதனை பார்த்து வியந்த நெட்டிசன்கள் பலரும் இவர் மேகனைப் போலவே இருப்பதாக கூறி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.