--- --:--:-- --

சைக்கிளில் சென்றவரால் ஏற்பட்ட கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

7

திண்டுக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே சைக்கிளில் சென்ற கிருஷ்ணன் என்பவர் சாலையை கடக்க முயற்சித்தார்.

 

அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஓட்டுநர் அவர் மீது மோதாமல் இருக்க காரைத் திருப்பியுள்ளார். இதனால் நிலைகுலைந்த கார் சாலையில் தடுப்பை தாண்டி எதிர் பக்கம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது.

 

இந்த விபத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற காரில் பயணித்த வெள்ளையன் மைந்தன், சிந்தாமணி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon