“எங்களுக்கும் அடிதடி தெரியும்”..? ரவீந்திரநாத்குமார் எம்.பி., மீதான தாக்குதலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிலடி!!

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களுக்கும் அடிதடி தெரியுமென எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் பங்கேற்கச் சென்றார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ரவீந்திரநாத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் கருப்புக் கொடி காட்டப்போவதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ரவீந்திரநாத்குமார் வந்தபோது அவருடைய கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும். அதை விடுத்து அடிதடியில் இறங்கினால் நாங்களும் சும்மா இருக்க மாட்டோம். அதிமுகவினருக்கும் அடிதடி தெரியும் என எச்சரிக்கை விடுக்கும் விதமாக ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply