--- --:--:-- --

அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி திடீர் கைது ஏன்..? பரபரப்பு தகவல்கள்!!

ewtwe

அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை அதிகாலையில் கைது செய்த கோவை போலீசார் அவர் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அதிமுகவில் நீடிப்பது போல காட்டிக் கொண்டு, போலியாக இணையதளம் நடத்திய தே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எம்பி மற்றும் எம்எல்ஏவாக இருந்தவர் கே.சி பழனிச்சாமி. ஜெயலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ. பன்னீர்செல்வம் அணியில் முக்கிய தளபதியாக விளங்கியவர் கே வி பழனிச்சாமி. மேலும் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கவும், இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் அணிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு மேல் வழக்குத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் முக்கியத்துவம் பெற்றவர் தான் கே.சி.பழனிசாமி.

பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தபோது அதிமுகவில் கே.சி பழனிச்சாமியும் இணைந்தார். அவருக்கு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறியதால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

 

ஆனாலும் அதிமுக கரைவேட்டி, இரட்டை இலைச் சின்னம், கட்சி பெயரை பயன்படுத்தி தொடர்ந்து கட்சியில் நீடிப்பது போல் கே.சி.பழனிசாமி செயல்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் கூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்திலும் சந்தித்தார். இதனால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்றும் பேச்சுக்கள் எழுந்தது.

 

இந்நிலையில், இன்று அதிகாலை கோவையில் உள்ள அவருடைய இல்லத்தில் பழனிச்சாமியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று கோவை சூலூர் காவல் நிலையத்தில் கே சி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினர். ஆள் மாறாட்டம், மோசடி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 11 பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவையை அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே சி பழனிச்சாமி, அதிமுக பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவர் நடத்தும் இணையதளத்தில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தி வருவதாகவும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon