--- --:--:-- --

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு..!

5

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிராகப் போக்சோ வழக்கில் தேடப்படும் பிரகாஷுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட காவல்துறை திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். தனது அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும், அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாக அந்த நபர் தெரிவித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

 

அந்த பென்டிரைவில் இருந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்தபோது, வயதான நபர் ஒருவர் சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், வீடியோவில் இடம்பெற்றிருந்த நபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

காய்கறி வெட்டும் பலகைக்கும் காலாவதி தேதி இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
அப்போது வீரமணிக்கு 84 வயது. சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்காகவே தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வீரமணி வாடகைக்கு எடுத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீட்டின் நிர்வாகப் பொறுப்பை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மனிடம் ஒப்படைத்திருந்தார். அந்த வீட்டில்தான் சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

மேலும், சில தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிராகப் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

இதே வழக்கில் எப்ஐஆரில் தன் பெயரை சேர்க்காமல் இருக்க ஜெம் வீரமணி ரூ.70 கோடி வரை செலவழித்துள்ளதாகவும் இதற்காக சென்னை இசிஆர், உதகை பகுதிகளில் உள்ள ரூ.130 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட் செய்ததாகவும் தகவல் வெளியானது. எஸ்ஆர்எம்யு ரயில்வே தொழில்சங்க நிர்வாகி கன்னையாவின் மகன் பிரகாஷ் மூலம் பலருக்கும் பணம் செட்டில்மென்ட் செய்யப்பட்டது எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீஸார் பிரகாஷுக்கு சம்மன் அனுப்பினர். சம்மனை அவர் வீட்டில் கொடுக்கச் சென்றபோது பிரகாஷ் வெளிநாட்டில் இருப்பதாக வீட்டினர் கூறியிருப்பதால் அவரை கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

 

தற்போது பிரகாஷ் லண்டனில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவரை கைது செய்ய சென்னை காவல்துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட உள்ளது என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை தொடர்ந்து கண்ணையா பிரகாஷை விரைந்து கைது செய்ய அவருக்கு எதிராக தமிழக காவல்துறை அவரைக் கைது செய்ய சென்னை காவல்துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட உள்ளது என்றும் அதன்மூலம் இன்டர்போல் மற்றும் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் உதவியை நாடக்கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon