--- --:--:-- --

இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

9

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் (அக்டோபர் 22) மழை நீடிக்கும் என்பதால், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

அதே சமயம் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, குமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று காலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு பிரதானமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

 

தெற்கு தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பிற தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும்.

 

 

மேற்கு தமிழ்நாட்டில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்டோபர் 23) அரபிக்கடலை நோக்கி நகர்வதால் திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் முதல் கடலோரப் பகுதிகள் வரை, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon