கர்நாடகாவில் நடந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி மாணவிகள் சிலர் ஆடிட்டோரியத்தில் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜிதா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற போது மயங்கி விழுந்த மாணவியை உடனடியாக சக மாணவிகள் எழுப்ப முயன்றபோது அங்கிருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது இருக்கையில் பதற்றமின்றி அமர்ந்திருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!