குரூப்-4 தேர்வு முறைகேடு: அரசின் நடவடிக்கைக்கு கனிமொழி எம்.பி வரவேற்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பதிவில் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான தேர்வர்கள் நம்பியிருக்கும் டிஎன்பிஎஸ்சி, இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply