கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது, குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அதிா்ச்சி : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்த இளம் பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்ததாக , பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி குண்டுடிரிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் ( 32 ) . கூலி தொழிலாளி . இவரது மனைவி மோகனப்பிரியா ( 26 ) . இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது . மோகனப்பிரியா நிறைமாத கர்பிணியாக இருந்ததால் , ரங்கம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் , நேற்று முன்தினம் பெற்றோர்கள் அனுமதித்தனர் .
இந்நிலையில் இரவு 10மணிக்கு மேல் , மோகனப்பிரியாவிற்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது . அப்போது பரிசோதித்தமருத்துவர்கள் , மோகனப்பிரியாவை , சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர் . இதையடுத்து மோகனப்பிரியாவின் பெற்றோர்கள் , சங்ககிரி சாலையில் உள்ளதனியார் மருத்துவமனையில் , அனுமதித்தனர் . இந்நிலையில் நேற்று காலை மோகனப்பிரியா யவிற்கு , அறுவை சிகிச்சை மூலம் , ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர் .
அப்போது தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் , அரசு மருத்துவமனையில் இருந்து , மோகனப்பிரியாவை விரைவில் அழைத்து வந்திருக்க வேண்டும் . மருத்துவம் தாமதமாக பார்த்ததால் தான் குழந்தை இறந்துள்ளது என தெரிவித்தனர் . இதனால் ஆத்திரம் அடைந்த மோகனப்பிரி யாவின் , பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் , ரங்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு , மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் , சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் . அப்போது மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதில் சிக்கல் இருந்ததால் , சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறினோம். ஆனால் மோகனப்பிரியாவின் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . எங்கள் மீது தவறு இல்லை தனியார் மருத்துவமனையில் தவறு நடந்து இருக்கலாம் என்றனர். இதையடுத்து அரசு மருத் துவமனை மருத்துவ பரி சோதனையும் , தனியார் மருத்துவமனை மருத்துவ சிகிச்சையையும் ஆய்வு செய்யக்கோரி , மாவட்ட சுகாதார மையத்தில் புகார் கொடுக்கப்போவ தாக அவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




