--- --:--:-- --

நித்தியானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

6

நித்தியானந்தாவிற்கு எதிராக குஜராத் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். நித்தியானந்தா தன் இரு மகள்களை சட்டவிரோதமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக ஜனார்த்தனா ஷர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

 

இதுதொடர்பாக கடந்த நவம்பரில் குஜராத் போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து நித்யானந்தா தப்பியோடி ரகசிய இடத்தில் தலைமறைவானார். இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்கள் தங்கள் தந்தை கூறிய குற்றச்சாட்டை மறுத்தனர்.

 

இந்நிலையில் ஜனார்த்தனா ஷர்மாவின் புகார் அடிப்படையில் ரகசியமாக கடத்திச் சென்று அடைத்து வைத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குஜராத் போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon