பாலியல் வன்கொடுமை – சிறுவன் உட்பட 4 பேர் கைது

வேலூர் கோட்டையில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடியை சேர்ந்த அஜித் என்பவர் அதே பகுதியில் பிரபல துணிக்கடையில் பணியாற்றி வருகிறார்.

 

இவரும் இவரது காதலியும் கடந்த 18ஆம் தேதி இரவு 10 மணி அளவில் வேலூர் கோட்டையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்ததோடு நகை மற்றும் செல்போனையும் பறித்து சென்றது.

 

இது குறித்து விசாரணை மேற்கொண்ட வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேரு நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் கஸ்பா மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல், எழில்நகர் ஆட்டோ ஓட்டுநர் கொய்யா மாறி ஆகியோரை கைது செய்தனர். 17 வயது சிறுவனை சென்னை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார் மற்ற மூன்று பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Leave a Reply