செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும் என கூகுள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் தானியங்கி கார், மருத்துவம் சார்ந்த நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என கூறியுள்ள சுந்தர்பிச்சை, இது மிகவும் முக்கியம் என்றும் அதே நேரத்தில் கட்டாயப்படுத்தாமல் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுப்பது. மேலும் தேவையற்ற தொழில்நுட்பங்களை தவிர்க்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியது. இதையடுத்து முகத்தை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை 5 ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்ஃபபேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் நன்மை தரக்கூடியது என்றும் அதே நேரத்தில் அதனை தவறான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.






