--- --:--:-- --

பட்ஜெட் 2020 பணிகளை அல்வாவுடன் தொடங்கிய நிர்மலா சீதாராமன்

9

மத்திய பட்ஜெட் அச்சடிப்பு பணிகள் தொடங்கும் நிலையில் நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அல்வா தயாரித்து வழங்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சஹர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அல்வா வழங்கினார்.

 

இந்நிகழ்வில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராத்தாகூரும், நிதித்துறையின் நிதிச் சேவைகள் துறை, வருவாய் துறை, செலவினங்கள் துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.

 

பட்ஜெட் உரை அடங்கிய புத்தகம் அச்சடிப்புக்கு முன்னர் அதை தயாரிக்க உறுதுணையாக இருக்கும் நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அல்வா தயாரித்து வழங்குவது சுதந்திர இந்தியாவில் பாரம்பரியமாக வழக்கமாக இருந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon