தலை முடிக்காக உயிரை விட்ட மாணவன்

சென்னையில் தனது விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியதால் விரக்தியடைந்த பிளஸ்டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் அருகே கைகங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகனா என்பவர் கணவரை பிரிந்து தனித்து வசித்து வருகிறார்.

 

இவர் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் குன்றத்தூர் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொங்கல் விடுமுறையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீநிவாசன் ஸ்டைலாக முடி வெட்டிக் கொள்ள விருப்பப்பட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தாய் மோகனா மகனை சலூன் கடைக்கு அழைத்து சென்று ஸ்ரீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்த ஸ்ரீநிவாசன் தாயின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். தகவல் அறிந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கணவரைப் பிரிந்து வசித்து வந்த நிலையில் மகனும் தற்கொலை செய்து கொண்டதால் ஆதரவின்றி தவித்து வருவதாக தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply