கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை செல்வபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வந்ததையடுத்து கோவை செல்வபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 17 ஆம் தேதி ரோஷன் பரித், அப்பாஸ், அக்பர் ஆசிப், ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.

விசாரணையில் இவர்கள் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டுவந்துள்ளார்கள்என்பதும்,இதில் ரோஷன் பரித் மீது கோவையில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனால் செல்வபுரம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் கோவை மாநகர காவல் ஆணையரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவுசெய்ய பரிந்துரை செய்ததின் பேரில் கோவை மாநகர ஆணையாளர் சுமித் சரண் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார்.அதன் பேரில் குண்டர் தடுப்பு காவலில் மூவரையும் கைது செய்த காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply