பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி டிவீட்

விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையான ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவிற்கு நடிகை ஷபானா ஆஸ்மி காரில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது காகல்பூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. உடனே அவர் மீட்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்தியதாக கார் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது ஷபானா ஆஸ்மியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply