வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெகன்மோகன் மீது 10க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஜெகன்மோகன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிபிஐ நீதிமன்றம் இன்றையதினம் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நீதிமன்றத்தில் ஜெகன்மோகன் ஆஜராகி இருப்பது இதுவே முதன் முறை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் 2012 மே மாதம் முதல் 2013 செப்டம்பர் வரையில் சிறையில் இருந்தது நினைவுகூரத்தக்கது.






