வாக்கு எண்ணிக்கை வீடியோ ஆதாரங்களை சமர்பிக்க இடைக்காலத் தடை

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க கோரிய மனுக்களை ஏற்ற மதுரை கிளை, வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

 

வீடியோ பதிவு ஆதாரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து இருந்தது. இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

அதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Leave a Reply