மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சனை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகள்..?திடுக்கிடும் தகவல்கள்..! புகைப்படங்களும் வெளியீடு!!

மார்த்தாண்டம் அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றது கேரளாவைச் சேர்ந்த இருவர் என்றும், இவர்கள் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் வில்சன். இவர் தமிழக – கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் நேற்றிரவு பணியில் இருந்த போது, 2 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனியாக பணியில் இருந்த வில்னை, கேரளாவில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற காரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சுட்டுக்கொன்ற சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த முகமது சமி, தெளபிக் என்ற இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இருவரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஏற்கனவே பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், நாசவேலைகளில் ஈடுபடலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் எஸ்.ஐ.வில்சனை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துடன் சந்தேகப்படும் இரு நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply