நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை, திமுக மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
ஆளுநர் உரை முடிந்தவுடன், இன்றைய கூட்டம் நிறைடைந்தது. தொடர்ந்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி பாதிக்கப்பட்டது. பின்னர் வரும் ஒன்பதாம் தேதி வரை 3 நாட்களுக்கு சட்டசபை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது .
நாளை மற்றும் நாளை மறுநாள் என முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதமும், மூன்றாவது நாளான 9-ம் தேதி வியாழக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தும் , விவாதத்துக்கு பதிலளித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அத்துடன் இந்த கூட்டத்தொடர் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
எனவே இந்த 3 நாட்களும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.