குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பொய்யான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும் எனக்கூறி சுற்றி ஒரு தேங்காய்களை உடைத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தூத்துக்குடியில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்று அர்ஜுன் சம்பத் பின்னர் குடியுரிமை சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிந்தும் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் எனக் கூறி நூற்றி ஒரு தேங்காய்களை உடைத்து குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் விவேகானந்தர் பிறந்த நாளில் மதுவிலக்கு அறிவிக்க வேண்டும் என்றும் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி கள்இயக்கத்துடன் இணைந்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அர்ஜுன்சம்பத் வலியுறுத்தினார்.