சம வாக்குகள் பெற்ற இருவேட்பாளர்கள் : மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வெற்றி வேட்பாளர் தேர்வு

ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர்களாக பஞ்சவள்ளி, சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் இருவரும் தலா 664 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துப்பட்டது.

 

அதிலும் இருவரும் சம வாக்குகள் பெற்றிருந்ததால் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளராக சரஸ்வதி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மற்றொரு வேட்பாளர் பஞ்சவள்ளி அதிருப்தி தெரிவித்தார். தேர்தல் விதிமுறைப்படி இருவரின் ஒப்புதலோடு குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.


Leave a Reply