கோவையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட எம்.எல்.ஏ மகள் வெற்றி !!!
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4 வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிட்டார்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை வெளியான முடிவுகளில் அபிநயா 21996 வாக்குகளும், திமுக வேட்பாளர் கோமதி நடராஜன் 18, 694 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதன் மூலம் அபிநயா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோமதி நடராஜனை விட 3434 வாக்குகள் அதிகம் பெற்று மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை வெளியானதால் தனது வெற்றிச் சான்றிதழை அபிநயா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்றுச்சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




