இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம்

சிவகங்கை அருகே இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர்.

 

இதில் தேவி 318 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது அருகே நின்றிருந்த மற்றொரு வேட்பாளரான பிரியதர்ஷினி , தேவிக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பறிக்க முயன்றார். மேலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் பிரியதர்ஷினி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

 

இதனையடுத்து மீண்டும் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் நீடித்தது.


Leave a Reply