--- --:--:-- --

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை

8

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடுமுழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏ‌என்‌ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமைச்சர் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கமளித்தார்.

 

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக பெறப்படும் தகவல்கள் குடிமக்கள் பதிவேட்டிற்கு பயன்படுத்தப்படாது என திட்டவட்டமாக அவர் கூறினார். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என கூறிய அமித்ஷா இது தொடர்பாக அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு இந்தியரும் தங்களது குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என அவர் உறுதியளித்தார். நாட்டில் அகதிகள் முகாம் அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என பிரதமர் கூறியது உண்மையை எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

 

மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்ற முடிவை கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதலமைச்சர்கள் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட உள்துறை அமைச்சர் உங்களுடைய அரசியலுக்காக ஏழைகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க வேண்டாம் என குற்றம்சாட்டினார்.

 

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி வருவதாகவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு காங்கிரஸ் ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது எனவும் தனது பேட்டியில் அமித்ஷா விளக்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon