என் மீதான பாலியல் வழக்குகள் புனையப்பட்டவை
பொய்யான புகார்களின் அடிப்படையில் தம் மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கிறார். யூடியுப் மூலம் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். நித்யானந்தா மீது அவரது முன்னாள் சீடர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தனர்.
அதன் மீது கர்நாடக காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நித்யானந்தா திடீரென தலைமறைவாகியுள்ளார். அவரை கண்டுபிடிக்க இன்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது கர்நாடக காவல்துறை. மேலும் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரும்படி சிபிஐக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் புகார்கள் புனையப்பட்டவை என நித்யானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் புகார்கள் பொய்யானவை எனக்கூறும் நித்யானந்தா அதன் மீதான விசாரணைக்கு ஆஜராகாமல் 40க்கும் மேற்பட்ட முறை வாய்தா வாங்கி இருக்கிறார் என்பது நினைவுகூறத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




