--- --:--:-- --

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

12

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வசூல் கணிசமாக குறைந்துள்ள நிலையில் அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது .

 

தற்போது ஜிஎஸ்டி விகிதங்கள் 5%, 12%, 18% மற்றும் 28% சதவீதமாக உள்ள நிலையில், அதனை 8% ,18%, 28% என மூன்று நிலை சதவீதங்கள் ஆக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலியாக ஜிஎஸ்டி பில் தயாரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

 

மேலும் வரி இல்லாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது ஸ்மார்ட்போன், விமான பயண கட்டணம், பட்டாடைகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon