கொரில்லா அரசியல் வேண்டாம்! பிரதமர் மோடி பேச்சு!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் ஜனநாயக முறையில் அரசுடன் விவாதிக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இளைஞர்களிடையே நகரப்புற நக்சல்கள் வன்முறையை தூண்டுவதாக குற்றம்சாட்டிய மோடி குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமியர் மத்தியில் காங்கிரஸ் கட்சி அச்சத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். தைரியமிருந்தால் பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க காங்கிரஸ் தயாரா என்றும் பிரதமர் சவால் விடுத்தார்.
இதனிடையே எதிர்கட்சிகள் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். சிறுபான்மையினரின் குடியுரிமை பறி போகும் வகையில் சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




