எல்லாமே சரியாக இருந்தும் லஞ்சம் கேட்ட போலீஸ்!! தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திருப்பூரில் ஏற்பட்ட பரபரப்பு!!

சார், டிரைவர் லைசன்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் சரியா இருக்கு சார் என்று கெஞ்சியும், ரூ 200 லஞ்சம் கேட்ட போலீசைக் கண்டித்து ஷேர் ஆட்டோ டிரைவர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பாகி விட்டது.

 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால்ரோட்டை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் வாடகை்ககு சரக்கு ஆட்டோ ஓட்டிவருகிறார்.இன்று மதியம் தனது ஆட்டோவில் பெரியபாளையத்திலிருந்து கூலிபாளையம் சென்று கொண்டிருந்தார். அப்போது கூலிபாளையம் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஊத்துக்குளி போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜ்மூர்த்தி தலைமையிலான போலீசார் அர்ஜூன் ஓட்டிவந்த வாகனத்தை நீறுத்தி சோதனை செய்துள்ளனர்.

 

டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி உள்ளிட்ட அனைத்து ஆவனங்களும் சரியாக இருந்தும் 200 ருபாய் கொடுத்து விட்டு போ என உதவி ஆய்வாளர் ராஜ்மூர்த்தி கேட்டுள்ளார்.சார், எல்லாமே சரியா இருக்குல்ல சார், அப்புறம் ஏன் சார் 200 ரூபாய் கேட்கறீங்க என்று அர்ஜுன் அப்பாவியாக கேட்டுள்ளார். போலீசாரோ, மாமூல் வாங்குவதிலேயே குறியாக இருந்து கறார் காட்டியுள்ளனர். காசு இல்லை என்று அர்ஜூன் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் கண்டிப்பு காட்டியுள்ளனர்.

இதனால், ஆத்திரமும், கோபமடைந்த அர்ஜூன், தனது ஆட்டோவில் ஒரு கேனில் வைத்திருந்த டீசலை எடுத்து தன் உடலில் ஊற்றினார். தற்கொலை செய்யப் போவதாகக் கூறி நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

 

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர். மாமூல் கேட்ட போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசினர். டிஎஸ்பியிடமும் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு வழியாக பொதுமக்களை சமாதானப்படுத்திய டிஎஸ்பி, பொது மக்களை கலைந்து போகச் செய்து, போக்குவரத்தை சீர் செய்தார். பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூனை, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Leave a Reply